search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உகந்த மாநிலம்"

    எளிதாக தொழில் நடத்த உகந்த மாநிலங்களில் ஆந்திராவுக்கு தொடர்ந்து 2-வது ஆண்டாக முதல் இடம் கிடைத்து உள்ளது. தமிழ்நாட்டுக்கு 15-ம் இடம் கிடைத்து இருக்கிறது.
    புதுடெல்லி:

    நாட்டில் எளிதாக தொழில் தொடங்கி நடத்த உகந்த மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் ஆராய்ந்து, மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை தரவரிசை பட்டியல் தயாரித்து வெளியிட்டு உள்ளது.

    கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்குதல், தொழிலாளர்கள் நலன், சுற்றுச்சூழல் ஒப்புதல், தகவல் பெறும் வசதி, நிலம் கையிருப்பு, ஒற்றைச்சாளர முறையில் விரைவான அனுமதி உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆந்திரா முதல் இடம் பிடித்து உள்ளது. 2-ம் இடத்தில் தெலுங்கானா மாநிலம் உள்ளது. முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டுக்கு இடம் இல்லை.

    3-ம் இடம் அரியானா, 4-ம் இடம் ஜார்கண்ட், 5-ம் இடம் குஜராத், 6-ம் இடம் சத்தீஷ்கார், 7-ம் இடம் மத்திய பிரதேசம், 8-ம் இடம் கர்நாடகம், 9-ம் இடம் ராஜஸ்தான், 10-ம் இடம் மேற்கு வங்காளம் மாநிலங்களுக்கு கிடைத்து உள்ளது.

    தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்து உள்ளது.

    டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு 23-வது இடம். கடைசி இடம் மேகாலயாவுக்கு கிடைத்து இருக்கிறது. 
    ×